கூட்டமைப்பு மீதான விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டதே – சீ.வீ.கே. சிவஞானம்
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள், ஏற்கனவே வெளியில் நின்றவர்கள் எம்மை விமர்சிக்கலாம். அவர்களின் விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டதே தவிர தமிழ் தேசியம் கொண்டாதாகவோ அல்லது தமிழ் மக்களின் அபிலாசைகளை தாங்கியதாகவோ இல்லை என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்தெரிவித்தார்.
தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று முன்தினம் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2001ம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய காலத்தில் இருந்து விடுதலைப் புலிகளினுடைய அங்காரம் எமக்கு இருந்தது. அந்த அங்கிகாரத்தின் விழைவாகவே 2004ம் ஆண்டு கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்றிருந்தது. தொடர்ந்து 2013ம் ஆண்டும் அந்த ஆதரவை முன்வைத்து வடக்கு மாகாண சபையினை கைப்பற்றினோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த ஒரேஒரு தவறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது என எங்களோடு மாகாணசபையில் ஜந்து வருடங்கள் இணைந்து செயற்பட்டவர்கள் இப்போது சொல்கிறார்கள். இவர்களது கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது
Comments are closed.