ராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது மக்களுக்கு தெரியும் : மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய

யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா என பொதுமக்களிடம் போய் கேட்டுப் பார்த்தால் விளங்கும் அரசியல்வாதிகள் போலிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் என்கிறார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபட்டு வருவதாக சில அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள் இது தொடர்பில் பொது மக்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும் ராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகிறார்களா என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய தெரிவித்தார் இன்றைய தினம் நிகழ்வில் கலந்துகொண்ட இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நேற்று முன்தினம் இலங்கை ராணுவ தளபதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு ராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்தார் இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள் இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் இராணுவத்தினர் ஆகிய எமக்கு பொதுமக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளை செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதோடு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வருகின்றோம் அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளோம்.
Comments are closed.