முஸ்லிம் மக்களை அநாதையாக்கிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் – மு.கா. கவலை

“முஸ்லிம் மக்கள் தொடர்பில் அக்கறை இல்லாமல் – அவர்களை அநாதையாக்கிவிடும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் கவலை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இணைந்த வடக்கு – கிழக்கு தனி மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் தொடர்பில் அக்கறை இல்லாமல் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இது கூட்டமைப்பின் திட்டமிட்ட சதியாகும்.
முஸ்லிம்களை அநாதையாக்கிவிடும் வேலைகளை தமிழ்த் தலைமைகள் செய்வதை தந்தை செல்வா இருந்திருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார். தாராள மனதுடன் செயற்பட்ட தமிழ்த் தலைமைகள் மத்தியில் இப்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது மன வேதனைக்குரியது” – என்றார்.

Comments are closed.