கோட்டாபயவின் கையொப்பத்தை பயன்படுத்திய வங்கி ஊழியர் கைது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்தையும், கடிதத்தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குருநாகலை சேர்ந்த குமார என்பவர் பணி தடையில் இருந்துள்ள நிலையில் தமக்கு வங்கியில் சம்பள கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகளுடன் பணிக்கு மீண்டும் சேவையில் அமர்த்துமாறு குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடிததலைப்பையும், கையொப்பத்தையும் இட்டு கடிதமொன்றை இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அக்கடிதம் போலியானது என உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து வங்கி தலைமையகத்துக்கு அவர் அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவணத்தை தயார் செய்ய பயன்படுத்திய மடிகணனி , ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
Comments are closed.