மக்கள் மீது கருணை காட்டும் வகையில் ஆட்சி அதிகாரம் முன்னெடுக்க வேண்டும் – தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் சஜித் பிரேமதாச
மக்களின் பிரச்சினைகளை அனுதாபமாக நோக்கி தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தான் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.
ஒரு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது அக்கட்சி அடுத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களையே குறிப்பதாக தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு முன்வைக்கப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்களை அரச அங்கீகாரம் கிடைத்தவுடன் பலர் மறந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒழுக்க ரீதியாக ஆளப்படவேண்டிய அதே சந்தர்ப்பத்தில் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அத்துடன் மக்கள் மீது கருணை காட்டும் வகையில் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்கவேண்டுமெனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரச அதிகாரத்தை பொறுப்பேற்க நாம் தயார் மக்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற உள்ளார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Comments are closed.