இறுதியுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவும் – கஜேந்திரகுமார்

இறுதியுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் ஏழாயிரம் பொது மகளே இறந்திருந்தாகவும். தமிழ் கட்சிகளே இறந்தவர்களின் எண்ணிக்கையினை மிகைப்படுத்தி கூறுவதாகவும் இராணுவத் தளபதி சர்வேந்திரசில்வா கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தில் ஏழாயிரம் பொதுமக்கள் மாத்திரமே கொல்லப்பட்டனர் என இராணுவத்தளபதி கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது. யுத்தம் இடம்பெற்றபோது விடுதலைப் புலிளின் கட்டுப்பாட்டில் நான்கரை இலட்சம் மக்கள் இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இறுதி யுத்தின் போது முன்று இலட்சத்தி இருபதாயிரம் மக்கள் மட்டுமே அரச பகுதிக்குள் உயிருடன் வந்து சேர்ந்தனர். இங்கு ஒன்ரரை இலட்சம் மக்கள் எங்கே என்ற கேள்வி எழுகின்றது. இறுதியுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளை கண்டறிய வேண்டும். ஆனால் அதற்கு அரசாங்கம் தயங்கி நிற்கின்றது.

Comments are closed.