நல்லூர் உற்சவ காலத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பக்தர்கள் பங்கேற்கலாம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பங்கேற்க கூடிய பக்தர்களை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியளிக்க முடியும் என மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன் தெரிவித்தார்.

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற மாநகர சபையின் விசேட சபைக் கூட்டத்திலேயே மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

குறித்த அமர்விலே ஆணையாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

ஏனைய இடங்களின் நடவடிக்கை போன்று ஆரம்பத்தில் 50 பேருக்கான அனுமதியை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வழங்கியிருந்தார். இருப்பினும் முதல்வர் சார்பிலே குறைந்தது 300 பேருக்கான அனுமதியேனும் வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டதோடு ஆலய விவகாரம் தொடர்பில் பலரும் சுகாதார அமைச்சில் இருந்து பிரதமர் வரையில் கொண்டு செல்லப்பட்டது.

இதன் பின்பு தற்போது சுகாதார முறவப்படி ஆலய தரிசண மரபுடன் சமூகமளிப்பவர்களை கொரோனா முன் எச்சரிக்கையுடன் அனுமதிக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே அதன்போது ஒரு தொகை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என நம்பலாம். இருப்பினும் காவடி , அங்கப் பிரதட்டை , அடியடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களிற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலமையே இதுவரை கானப்படுகின்றபோதும் சுகாதார முன்னேற்றம் கண்டாள் மேலும் சில விடயங்கள் அனுமதிக்கப்பட கூடும். மாறாக கொரோனா பரவல் ஏற்பட்டாள் இருக்கமான நிலமையும் ஏற்படக்கூடும். எது எவ்வாறு இருப்பினும் திருவிழா நடக்கும் . என்றார். எனவே இதற்கான நகல நடவடிக்கையினையும் முன்ஏற்பாடுகளையும் மாநகர சபை மேற்கொள்ள சபை முழு அனுமதியை வழங்கியது.

Comments are closed.