மனநலம் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சிறுவனை போலீஸ் சித்திரவதை செய்தமை குறித்து புகார்
விசேட தேவைகளைக் கொண்ட ஒரு முஸ்லீம் சிறுவனை போலீசார் மிருகத்தனமாக தாக்கி சித்திரவதை செய்தமை தொடர்பான புகாரை ஏற்றுக் கொள்ளாமல் தவறாக வழிநடத்த முயன்றதாக பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சித்திரவதை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை தற்போது போலீஸ் மேலிடத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தான் மிரட்டப்பட்டு புகாரை ஏற்றுக் கொள்ள அளுத்கம காவல்துறையினரின் மறுத்ததாக தெரிவித்துள்ளார்.
அளுத்கமவைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
குறித்த 14 வயதுடைய சிறுவன் தாக்கப்படும் CCTV காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அத்தோடு டுவிட்டரிலும் ட்ரெண்டாகியுள்ளது.
கடந்த மே மாதம் 25ஆம் திகதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த சிறுவனை கடுமையாக தாக்கியதால் காயமடைந்துள்ளார்.
அளுத்கமயைச் சேர்ந்த குறிப்பிட்ட 14 வயதுடைய, ஓட்டிஸம் குறைபாடுள்ள சிறுவன் , பொலிஸாரால் தாக்கப்பட்டமை தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மே 25ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில், மேற்படி சிறுவன் சைக்கிள் ஒன்றில் பயணித்தபோது, தர்கா நகரத்தில் உள்ள மாமரச் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் கடமையாற்றிய பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன, சிறுவன் தாக்கப்பட்டமை தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சிறுவனின் மருத்துவ அறிக்கைகளை, பொலிஸார் கோரியிருப்பதாகவும் இது தொடர்பில், முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார். இதேவேளை மேற்படி சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கண்டனங்களை, அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதோடு, இது தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.