ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட பாலித தெவரப்பெரும மருத்துவமனையில் …..
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட ஐதேக வேட்பாளருமான பாலித தெவரப்பெரும ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக மத்துகம போலீசார் தெரிவித்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் குடிநீர் அமைப்பில் உள்ள குழாய்களை ஆய்வு செய்யவென மத்துகம வேகண்டல பகுதிக்கு சென்றபோது ஒப்பந்தக்காரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி அருகே இருந்த பள்ளத்தில் விழுந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
முன்னாள் அமைச்சரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னரும் இராஜாங்க அமைச்சர் சம்பவ இடத்திற்குச் சென்று ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சர் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மத்துகம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.