மனை பொருளாதாரத்தை பலப்படுத்தக்கூடிய கட்சி ஐக்கிய தேசிய கட்சியே – ரணில் விக்ரமசிங்க
மனை பொருளாதாரத்தை பலப்படுத்தக் கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசியக்கட்சியாகுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்திற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய தகுதி இல்லாமையினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.
சகல நாடுகளும் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் மனை பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளதனால் நாடு தற்போது 7 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு செலாவணியை இழக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளதால் மனை பொருளாதாரத்தை பலப்படுத்தக்கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சியே என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.