டிப்பர் வாகனம் நாவற்குழி பிரதேசத்திலுள்ள கோவில் ஒன்றில் மோதி விபத்து
மன்னாரிலிருந்து யாழ் நோக்கி பயணப்பட்ட டிப்பர் வாகனம் நாவற்குழி பிரதேசத்திலுள்ள கோவில் ஒன்றில் மோதியுள்ளது.தொடர்ந்து நிகழும் இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டிக்கும் முகமாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான விபத்துக்கள் இன்றளவில் அதிகரித்துள்ளன.இவற்றில் டிப்பர் ஓட்டுனரை தண்டனைக்குரியவராக சித்திரிப்பதை கடந்து நாம் நிறைய விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முதலில் இவர்கள் பல தடவை அதாவது ஒருநாளுக்குள்ளே பல தடவைகள் ஓட்டங்களை எடுக்கின்றனர். காரணம் அந்த ஓட்டுனரின் பொருளாதார பின்னனி. அவ்வாறனவேளைகளில் அவர்கள் மிகவும் களைப்படைவதனால் அவர்களுக்கு தூக்கம் அசதி போன்றன ஏற்படுவதால் இவ் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இதற்கான மாற்று வழிகளாக ஓட்டுனருடன் ஒரு சுத்திகரிப்பாளர் மற்றும் பதில் ஓட்டுனர் கட்டாயம் அனுப்பபட வேண்டும். மேலும் டிப்பர் ஓட்டுனர்களின் சில செயற்பாடுகளும் இந்த விபத்துக்கு காரணமாகும். தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் ஓட்டுவது தவறானது அவற்றுக்கான தண்டனைகள் வலுப்பட வேண்டும்.
மேலும் இச்சாலைகளில் ஆங்காங்கே வேகத்தடுப்பான்களும் அமைக்கப்படவேண்டும். அத்துடன் குறித்த அளவிலான வேகத்திலேயே ஓட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிப்பதுடன் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் அவதானிப்பு இடம் பெறவேண்டும். பொலிஸ்மா அதிபர் இந்தவிடயத்தில் கவனமெடுத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
மேலதிகமாக சாலைகளில் கவனிப்பாரற்று விடப்படும் கால்நடைகள் இவ்விபத்துக்கு காரணமாவதுடன் அவைகளும் விபத்துக்குள்ளாகின்றன.இதனால் இன்னுமொருவரது பொருளாதார வாழ்வும் அழிக்கப்படுகின்றது. ஆகவே தொடர்சங்கிலியாக பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விடயம் தொடர்பில் உரிய அமைப்புக்கள் அவதானம் செலுத்தவேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.
Comments are closed.