அரந்தலாவை பிக்குமார் கொலை: நவம்பர் 12ஆம் திகதி விசாரணை!- காயங்களுடன் தப்பிய பிக்கு உயர்நீதிமன்றில் மனு

1987ஆம் ஆண்டு அரந்தலாவை 33 பௌத்த பிக்குமார் படுகொலையின்போது கடும் காயங்களுடன் தப்பிய பிக்கு ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

உயர்நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை நேற்று அறிவித்தது.

இந்தப் படுகொலையில் தொடர்புடைய தற்போது உயிருடன் இருக்கும் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரி அன்டௌல்பத்த புத்தசார என்ற பிக்குவே மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments are closed.