யாழ் பல்கலையில் கறுப்பு யூலை அனுஸ்டிப்பு
கறுப்பு யூலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் இன்று யாழ்பாண பல்கலைகத்தில் இடம்பெற்றது.
1983ஆம் ஆண்டு நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த தமிழ் உறவுகளை யாழ் பல்கலை வளாகத்தினுள் நினைவுகூறப்பட்டது.
பிந்திய செய்தி இணைப்பு:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.
1983ஆம் ஆண்டு, ஜூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காயப்படுத்தப்பட்டனர்.
தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன.
தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்த கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
Comments are closed.