ஹக்கர்களால் வடக்கின் அதிபர்கள் – ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு பிரச்சனை (வீடியோ)

அதிபர்களுடைய தொலைபேசி இலக்கத்தினை ஹக் செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சங்கத்தின் தலைவர் வே.த.ஜெயந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சூம் மற்றும் வைபர் ஊடாக முன்னெடுத்திருந்தோம். அந்த மூன்று மாத காலத்திலே அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி குறித்த செயலிகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அதனுடாக எங்களுடைய அதிபர்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும் அத்தோடு இல்லாதவர்களுடைய தொலைபேசி இலக்கத்தினை ஹக் செய்து எங்களுடைய தரவுகளை திருடி அந்த குழுவுக்குள் இருக்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தவறான தகவல்களை அனுப்புகின்றனர்.

இதனால் அதிபர், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக எங்களுடைய அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மன உழைச்சலுக்கும், விரத்திற்கும் ஆளாகியிருக்கின்றார்கள். இனிவரும் காலங்களிலும் இப்படியானதொரு நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

Comments are closed.