அரசியல்வாதிக்கு ஆதரவாக செயல்படும் அரச அதிகாரிகளது தேர்தல் பணியை இரத்துச்செய்ய கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் அரசியல்வாதிக்கு ஆதரவாக செயல்படுவதாக முடிவெடுத்த அரச அதிகாரிகள் அனைவரதும் தேர்தல் பணியை இரத்துச் செய்யுமாறு கோரி தெரிவத்தாட்சி அலுவலரிடம் முறையிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஓய்வு பெற்ற அதிகாரிகள. சிலருடன் இணைந்து தற்போதும் பணியில் உள்ள அதிகாரிகள் சிலருமாக கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள வர்த்தக நுலையக் கட்டிடம் ஒன்றில் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் செயல்பாடு குறித்துப்பேசி ஒர் அரசியல்வாதியின் வெற்றிக்காக செயல்படுவதாக முடிவெடுத்ததாக அக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுநிலை அதிகாரி பகிரங்க மேடையில் பெயர்களைக் கூறி உரையாற்றியுள்ளார்.

இவ்வாறு கூறப்படும் பெயர்களுல் பலர் தற்போதும் பணியில் உள்ள அதிகாரிகள் என்பதோடு எதிர்வரும் நாடாளுமன்றத் தே்தல் பணிக்கு விண்ணப்பித்தவர்களாகவும் கானப்படுகின்றனர் என்பதன் அடிப்படையில் உடனடியாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துற்கு கொண்டு செல்லப்ப்டுள்ளது.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்படும் எனவும் அதிகமாக இதில் கூறப்படும் பெயர்களை உடையவர்களிற்கு தேர்தல் கடமை வழங்கப்படுவது தொடர்பில் ஆராயப்படும் என மாவட்டச் செயலகத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.