நான் மிளகாய்த்தூள் வீசியது மஹிந்தவை பாதுகாக்க : பிரசன்ன ரணவீர

தான் பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் பிரயோகம் மேற்கொண்டது மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாக்க எனவும், மிளகாய் தூள் பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணத்தை தற்போது யாரும் கூறுவது இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
“மிளகாய்த்தூள் வீசியதை அனைவரும் காண்பிக்கிறார்கள், ஆனால் அதை செய்தது ஏன் என்பதை யாரும் கூறுவதில்லை.
சிலர் மஹிந்தவை பாதுகாக்க நாற்காலிகள், புத்தகங்கள், தண்ணீர் பாட்டில்களால் அடித்தனர். அது சரிவரவில்லை. நான் மிளகாய்தூளால் அடித்தேன். கருவிற்கு கொஞ்சமாக மிளகாய்த்தூள் பட்டது தான் கரு எழும்பி சென்று விட்டார். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (22) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரசன்ன ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
Comments are closed.