சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள சத்தியமூர்த்தி
எனது பெயர் முகநூல் , யூரிப் , மற்றும் வீடியோவில் அதிகம் வருவது தொடர்பில் பொலிசாரிடம் முறையிடவும் எண்ணுகின்றேன் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சித் தொகுதியை மையமாக கொண்டு கேடயம் சின்னத்தில் சுயேட்சைக் குழு 5ன் சார்பில் போட்டியிடும் குழுவின் தலைவரை ஆதரித்துச் செயல்படுவதாக மூத்த அரச அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்ததாக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் பகிரங்க மேடையில் தெரிவிப்பது தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில.
தேர்தல் காலத்தில் நான் பேச முடியாது . இருப்பினும் இவ்வாறு வெளிவந்த வீடியோ தொடர்பில் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். எனது கருத்தானால் நான் அறிக்கை மூலம் தெரிவிப்பேன். மாறாக இன்றைய உலகில் முகநூல் , யு ரிப் , மற்றும் வீடியோவில் அதிகம் வருவது தடுக்க முடியாது. இருப்பினும் தேர்தல் முடிய இது தொடர்பில் விரிவாக கூறுவேன். என்றார்.
Comments are closed.