கபே அமைப்பின் தேர்தல் தெளிவூட்டல் கலந்துரையாடல்
சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(25.07.2020) காலை இடம்பெற்றது.
“சமாதானமான தேர்தலை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் கபே அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். தினேஸ் தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் , தேர்தல் விதிமுறைகள் , கொரோணா கால சுகாதார நடைமுறைகள் போன்றன தெளிவுபடுத்தப்பட்டன. மேலும் பொது அமைப்புக்களை சேர்ந்த பலரும் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றியதுடன் அமைதியான தேர்தல் குறித்து சம்மதம் தெரிவித்து ஒப்பமிடும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
ப.தர்மினி
Comments are closed.