நல்லூரானை தரிசிக்க பலத்த கட்டுப்பாடு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் சமூக இடைவெளியுடனும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஆரம்பமானது.
நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 இடர்நிலைமையினை கருத்தில் கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் கடுமையான சுகாதார நடமுறைகளை பின்பற்றியபடி ஆரம்பானது.
அலயத்திற்கு வரைகைதரும் பக்தர்களில் முகக்கவசம் அணியாதோர் திருப்பி அனுப்பப்பட்டனர். அத்தோடு நான்கு திசைகளிலும் உள்ள பொலிஸாரின் சோதனைச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்கள் முன்னால் தங்கள் அடையாள அட்டை சகிதம் நின்று அவர்கள் கமெராவில் பதியப்பட்ட பின்னரே ஆலய சூழலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் ஆலய வழாகத்திற்குள் அதிக நேரம் பக்தர்கள் நிற்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் பக்தர்கள் ஆலயத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர்.
ஆலய சூழலில் வியாபார நடவடிக்கைகள், பஜனைகள், அங்கபிரதட்சணம், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்றனவும் தடைசெய்யப்பட்டு மிக எளிமையான முறையில் மகோற்சவம் இடம்பெற்றது. மேலும் ஆலய வழாகத்தில் பொதுமக்களின் வருகை குறைவாக காணப்பட்டதோடு பொலிஸாரைவிட இராணுவப் பிரசண்ணம் அதிகரித்து காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.