விரைவில் உள்நாட்டு அரிசி வகைகளை வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் செயற்பாடு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலைய பெற்று கொடுக்க அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்ககூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளை ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காட்டு யானையினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு உடனடி தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கிழங்கு உற்பத்தியில் 70 வீதமானவை பதுளை மாவட்டத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப முறைகளின் ஊடாக கூடிய விளைச்சலை பெற்று கொள்ள கூடிய முறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை உள்நாட்டு அரிசி வகைகளை வெளிநாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் செயற்பாட்டை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பதுளை கலஉடகந்தே பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் மீது பிரதமர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.