சுற்றுப்பயணம் மேற்கொள்ள சிறந்த நாடு இலங்கை – பிரித்தானியா தெரிவிப்பு
கொவிட் 19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த நாடு என பிரித்தானியா பெயரிட்டுள்ளது.
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பிரித்தானிய வெளிவிவிகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தற்போது காணப்படும் நிலைமையை அடுத்து குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துதவதற்கு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்பில் முழுமையாக அவதானம் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே பிரித்தானியா குறித்த தடை நீக்குவதற்கு தீர்மானித்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள நாடுகளுக்கு தமது நாட்டு பிரஜைகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியுமென பிரித்தானிய ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பசுமை நாடுகளின் பட்டியலையும் பிரித்தானியா வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.