சஜித்தின் உள்ளூராட்சி உறுப்பினர்களது சட்டப் பிரச்சனைக்காக 50 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு தயார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருக்கும் ஐதேக உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க முற்படுமானால் 50 மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவொன்று அவர்களுக்காக இலவசமாக வாதாட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதேக தலைமை தெரிவித்திருந்தது. ஐதேகவின் பெரும்பாலான உள்ளூராட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக உள்ளனர். இப்படியான செயல்பாடுகள் மூலம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான உள்ளூராட்சி உறுப்பினர்களை அடிமைப்படுத்த முடியாது என சஜித் பிரேமதாச தரப்பு தெரிவித்துள்ளது.
Comments are closed.