இம்முறை மாற்றத்தையும் தாண்டி உங்கள் தேவைகளை அறிந்து வாக்களியுங்கள் – பவதாரணி

இம்முறை மாற்றத்திற்காய் வாக்களியுங்கள் என்பதை தாண்டி உங்களின் தேவைகளை அறிந்து அதற்காய் வாக்களியுங்கள்.அதுவே இனிவரும் காலங்களில் மாற்றத்தை உருவாக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்றைய தினம் மானிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமனாதன், ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.