சஜித் ஆட்சி அமைத்ததும் யாழில் விவசாயப் புரட்சி – கணேஸ்வரன் வேலாயுதம்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றம் சென்ற எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளிடமும் விவசாயத்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கவில்லை. சஜித் பிரேமதாசவின் தலமையில் உருவாகும் ஆட்சியில் நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் ஒரு பெரும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரை ஒன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவது: விவசாயத்துறையை எடுத்துகொண்டால் எங்களுடைய தந்தை எவ்வாறு விவசாயம் செய்தாரோ அதேபோன்றுதான் இன்னும் வடக்கிலுள்ள மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல் அறுவடை செய்வதற்காக நவீன இயந்திரம் ஒன்று கிளிநொச்சியில் இருக்கின்றது. விவசாயத்துறையில் என்ன புரட்சிகரமான மாற்றத்தினை கொண்டு வந்தீர்கள்?. உண்மையிலேயே எமது பிரதேச அரசியல்வாதிகள் விவசாயத்துறையில் உள்ள மக்கள் பற்றி எந்தவிதமான கவனமும் செலுத்துவதில்லை.
தம்புள்ள பிரதேசத்தில் சென்று பாருங்கள் நவீன முறையில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சல்களை செய்கிறார்கள். அதை இன்று கையடக்க தொலைபேசியிலேயே செய்ய முடியும். அப்படியான தொழில்நுட்பங்கள் அருகிலுள்ள மாவட்டத்தில் உள்ளது. இதைக்கூட எங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவர முடியவில்லை. சாதாரண விவசாயிகள் இது பற்றி தேடி மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. 1983 ஆம் ஆண்டு எவ்வாறு இருந்தோமோ இன்னும் அந்த நிலையில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் விவசாயத்துறையில் புதிய மாற்றங்களை செய்ய வேண்டும். கிளிநொச்சியில் ஐந்து கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க கூடிய வசதிகள் தற்போதுகூட உள்ளன. இங்குள்ள மலையக தோட்டப்புற மக்கள் விவசாயத்தில் சளைத்தவர்கள் அல்லர். அவர்களுக்கு விவசாயத்துறையில் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
Comments are closed.