பிரச்சாரத்திற்காக யாழ் வரவுள்ள சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் கூட்டத்தில் பங்குகொள்ளும் நோக்கில் எதிர் வரும் 1ம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பயணிக்கின்றார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு ஆதரவுதேடி இடம்பெறும் தேர்தல் கூட்டத்தில் இன்றைய தினம் திருகோணமலையில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயாவுடன் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொள்கின்றனர்.
இதேநேரம் நாளைய தினம் மட்டக்களப்பில் இடம்பெறும் கூட்டங்களில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பங்குகொள்ளும் அதே நேரம் 1ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை ஆகிய இடங்களில் இடம்பெறும் இரு கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரைகளும் ஆற்றவுள்ளார்.
Comments are closed.