தேர்தலுக்கு ஊர் திரும்ப விசேட ரயில் சேவைகள்
தேர்தல் வாக்களிப்பிற்காக சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண வசதி கருதி, இம்மாதம் 31ஆம் திகதி முதல், எதிர்வரும் ஆகஸ்ட் 04ஆம் திகதி வரை 06 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று மேலதிக ரயில் பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையம் வரையும், இரவு 7.35 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையம் வரையும், இரவு 7 மணிக்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த ரயில் நிலையம் வரையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும்.
இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையம் வரையும், காலை 6.45 மணிக்கு பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து மருதானை ரயில் நிலையம் வரையும், அதிகாலை 3 மணிக்கு அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு, புறக்கோட்டை ரயில் நிலையம் வரையும் ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் கூறினார்.
Comments are closed.