யாழில் “”அவளுக்கு ஒரு வாக்கு “” வீதி நாடகம்
அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சார வீதி நாடகம் இன்று (29.07.2020) மருதனாமடம் சந்தையில் காலையிலும் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் மாலையிலும் இடம்பெற்றது.
மன்னார் மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருமதி மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு பெண்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். எவ்வாறு வாக்களிக்க வேண்டும் போன்ற விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் பெண்களால் தான் பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்துபேச முடியும் என்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடும் அதே வேளை . எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை.கட்சிகளுக்கு அப்பால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களுக்காகவே சேவைசெய்யக்கூடிய சிறந்த பொருத்தமான பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை மட்டும் பெண்களுக்கு வழங்குவதனூடாக பெண்பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கச் செய்வோம். “” இதனைத்தான் நாம் அனைத்து பெண்களிடமும் கோரி நிற்கின்றோம். எனத் தெரிவித்தனர்.
மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வவுனியா யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தெருக்களில் நாடகங்களுடன் வீடுகள் தோறும் செல்லும் இவர்கள் பெண் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.