பொதுத்தேர்தல் தொடர்பில் 5,601 முறைப்பாடுகள் பதிவு
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5 ஆயிரத்து 601 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஆயிரத்து 42 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 4 ஆயிரத்து 559 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
நேற்றுமுன்தினம் 27ஆம் திகதி மாலை 4 மணி முதல் நேற்று 28ஆம் திகதி மாலை 4 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மட்டும் 201 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 22 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 179 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இதேவேளை, வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.