UNPயில் இருந்து வெளியேற்றப்பட்ட 115 பேரின் பெயர்கள் வெளியாகியது
ஐக்கிய மக்கள் கட்சியில் பொதுத் தேர்தலுக்கு வேட்புமனு வழங்கியுள்ள 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 61 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக UNP பொதுச் செயலாளர் அகிலவிராஜ் கரியவாசம் நேற்று தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், இவ்வாறு UNP கட்சியின் உறுப்புரிமை நீக்கம் செய்யப்பட்ட 115 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய சுஜீவ சேனசிங்க, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க, அசோக் அபேசிங்க, வடிவேல் சுரேஷ், அஜித் பி பெரேரா, சிட்னி ஜயரத்ன, துஷார இந்தூனில், நலின் பண்டாரா, ஜோர்ஜ் பெரேரா, நிரோஷன் பாதுக்க, ரோஸ் பெரேரா ஆகிய முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கான அறிவித்தல் கடிதம் அனுப்பப்படும் என நேற்றையதினம் அகில விராஜ் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் குறித்த 115 பேர் கொண்ட பட்டியலில் சஜித் பிரேமதாசவின் பெயர் இல்லை.
இந்த 115 பேருக்கு மேலதிகமாக, யூ.என்.பி உறுப்பினர்களின் மற்றொரு குழு எதிர்காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்படும் என காரியவசம் தெரிவித்திருந்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரா, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான விசாரணை நடத்திய பின்னர் அதைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பதவிகளை பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.