அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிரந்தர வீடுகள்
நீதவான் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்துவந்த 70 குடும்பங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிரந்தர வீடுகள் – நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்!
வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் வலிதெற்கு பகுதியிலுள்ள நீதவான் நலன்புரி நிலையத்தில் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த சுமார் 70 குடும்பங்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் குறித்த பயனாளிகளின் சொந்த இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.
நாட்டில் நடந்த அழிவு யுத்தம் காரணமாக சுமார் 3 தசாப்தங்களாக தையிட்டி மயிலிட்டி பகுதிகளில் வாழ்ந்துவந்துவந்த ஒருதொகுதி மக்கள் இடம்பெயர்ந்து வலிகாமம் தெற்கு நீதவான் நலன்புரி நிலையத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பெரும் அவலங்களுடன் வாழ்ந்துவந்தனர்.
இந்நிலையில் இவர்களது வாழ்வாதார தேவைகளுக்காக அக்காலப்பகுதியில் பல தேவைப்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக்கொடுத்து வந்திருந்த பொதிலும் அம் மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அவர்களது காணி நிலங்கள் விடுவிக்கப்படாத நிலைமையால் தடைப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அவர்களது நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதை அடுத்து குறித்த நலன்பரி முகாமில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவாதனந்தா மேற்கொண்டிருந்தாரர்.
இதையடுத்தே குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Comments are closed.