யாழ். மக்கள் கூவத்தில் வாழும் போது , யாழ்.மாநகர சபைக்கு 1200 மிலியனில் புதியதொரு கட்டிடம் தேவையா? : கணேஸ் வேலாயுதம்
ஐக்கிய மக்கள் கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் பிரதான வேட்பாளரான கணேஸ் வேலாயுதம், குருநகரின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு மக்களை வேண்டிக் கொண்டார்.
அவரது தேர்தல் பிரசார நேரத்தில் கணேஸ் வேலாயுதத்தோடு கலந்துரையாடிய அங்குள்ள மக்கள், தங்களது குறைகளை கணேஸ் வேலாயுதத்திடம் முன் வைத்து அவர்களது அன்றாட மற்றும் நீண்ட காலமாக தீர்க்காமலிருக்கும் பிரச்சனைகளை தெரிவித்தனர். இத்தனை காலமும் கூட்டமைப்பும் , பல்வேறு கட்சிகளிலுள்ள அரசியல்வாதிகளும் வடக்கு அரசியலில் இருந்த போதிலும் , தங்கள் பகுதி தேவைகள் எதையும் செய்து தரவில்லை என மன வேதனையோடு தெரிவித்தார்கள்.
1200 மிலியனுக்கு நகரசபை மைதானத்தில் புதிய மாநாகர சபை ஒன்றை கட்ட இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பக்கத்தில் வாழும் எமக்கு ஒரு வீட்டுத் திட்டத்தை உருவாக்கித் தர இவர்கள் சிந்திக்கவே இல்லை. இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் வாக்களித்தோம் . ஆனால் இம்முறை எவருக்குமே வாக்களிப்பதில்லை எனும் முடிவுக்கு வந்திருந்தோம் எனக் கடும் கோபத்தோடு பேசிய சிலர், தங்கள் பகுதி பிரச்சனைகளை தீர்த்து தருவதாக இருந்தால் உங்களுக்கு எங்கள் வாக்குகளை தருகிறோம் என அங்குள்ளவர்கள் கணேஸ் வேலாயுததத்திடம் தெரிவித்தார்கள்.
லயன் போன்ற 200 சதுர அடிகளுக்குள் முடங்கிய 6 வீடுகளை அமைத்துக் கொண்டு வாழும் அவலத்தையும் அவர்கள் காண்பித்தனர்.
சஜித்தின் தந்தையான , காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் அங்குள்ள மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட 5 மாடி வீட்டு திட்டத்தைக் காண்பித்து , தமது ஊருக்கு ரணசிங்க பிரேமதாச தந்த வீட்டு திட்டம் மட்டுமே தமக்கு கிடைத்தது என்றும், அதற்கு பின்னர் அப்படியான ஒரு திட்டம் அங்கு வரவேயில்லை எனவும் அங்குள்ளார் தெரிவித்தார்கள்.
உடனடியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டு விடயத்தை தொலைபேசியில் கணேஸ் வேலாயுதம் தெரிவித்த போது , உலக வங்கி அல்லது ஒரு வெளிநாட்டின் உதவியோடு அங்குள்ள மக்களுக்கு தொடர் மாடி வீட்டு திட்டங்களை செய்து கொடுக்கலாம் எனச் சொல்லுங்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்ததோடு கால்வாய் பிரச்சனையையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
வடக்குக்கு வந்த வீட்டு திட்டங்களை நிறுத்த முனைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் , வீடில்லாமல் தவிப்போருக்கு அந்த வீடுகளையாவது தந்திருக்கலாம் , நாங்கள் உருப்படியான வீடுகளில்லாமல் இருக்கும் போது, இவர்களுக்கு எதுக்கு வீட்டு சின்னம் என ஆக்ரோசத்தோடு சிலர் கருத்துகளை பகிர்ந்துள்ளார்கள்.
பக்கத்தில் கண்ணுக்கு தெரியும் பிரச்சனைகளை தீர்க்க முடியாத இவர்களா , தேசிய பிரச்சனையை தீர்க்கப் போகிறார்கள். இவர்கள் காலம் காலமாக மக்களை முட்டாளாக்கி வாழ்கிறார்கள். செய்ய முடியாததை செய்ய முடியும் என்றும் , செய்ய முடிந்ததை செய்யாமலும் காலத்தை கடத்துகிறார்கள்.
அங்கே பாருங்கள் நகர சபையினர் , குழிகளை தோண்டி வெளியில் உள்ள கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கேட்டால் அதற்கு மேல் வீடுகளை கட்டவுள்ளோம் என்கிறார்கள். அதில் அநேகமானவை recycling செய்ய வேண்டிய பிளாஸ்டிக் உறைகள் மற்றும் போத்தல்கள். இதுவே சுற்று சுழலழுக்கு தீங்கிழைக்கக் கூடியவை. இதற்கு மேல் கட்டிடங்களை கட்டினால் கட்டிடம் சரிந்து விழலாம் என கணேஸ் வேலாயுதத்தோடு பேசிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
துப்பரவு செய்யாது தண்ணீர் தேங்கி நிற்கும் வாய்க்கால்களையும் , அங்கேயிருந்து எழும் தூநாற்றத்தையும் சிலர் காண்பித்து இவற்றை சுத்தம் செய்து , இதற்கான தீர்வு ஒன்றையும் செய்து தருமாறு வேண்டியுள்ளனர்.
எனக்கு ஆதரவு தாருங்கள் . நிச்சயம் இதற்கான விடிவை எப்படியும் உங்களுக்கு பெற்றுத் தருகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தி பிரதான வேட்பாளராக போட்டியிடும் கணேஸ் வேலாயுதம் , அவர்களிடம் உறுதியளித்துள்ளார். அதே சமயம் இந்த மக்கள் இப்படியான அவலத்தோடு வாழ்வை கழிக்கும் போது 1200 மிலியனுக்கு யாழ்.மாநகர சபை புதியதொரு கட்டிடத்தை கட்ட இருக்கிறது. அதற்கு முன் இந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க யாழ்.மாநகர சபை முயற்சி செய்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
– Janu
அப் பகுதி படங்கள் :-
Comments are closed.