சொக்கா மள்ளிக்கு (தம்பி) மரண தண்டனை !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர எனும் சொக்கா மள்ளிக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனித கொலை தொடர்பாக அவருக்கு எதிராக இரத்தினபுரி நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்திருந்த வழக்கு இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சொக்கா மள்ளி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்தது. ஏனைய பிரதிவாதிகளான சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான நிலந்த ஜயகொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆகியாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சொக்கா மள்ளி 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சிறைச்சாலையில் இருந்ததுடன் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.