பெரிய வெங்காய இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் வரி 15 ரூபாவிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை சந்தைக்கு வருவதோடு, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Comments are closed.