கொரோனாவுக்கு பயந்து வாக்களிப்பை புறக்கணிக்காதீர் – யாழு ஆயர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பைப் புறக்கணிக்காதீர்கள். கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விட வேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும் என் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி முகக்கவசங்களை அணிந்து நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று சமூக இடைவெளியைப் பேணி வாக்களித்து விட்டு விரைவாக வீடுகளுக்குச் செல்லுங்கள்.

யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை ஒவ்வொருவரும் எவரது தலையீடோ தூண்டுதலோ இன்றி சுயமாகவும் சுதந்திரமாகவும் எடுக்க வேண்டும். தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வாக்காளர்களைத் தெரிவு செய்யுங்கள், என்றார்

Comments are closed.