ஐக்கிய தேசிய கட்சி, தோல்வியின் பின்னர் பத்து மடங்கு பின்னடைவை சந்திக்கும் – லால்காந்த தெரிவிப்பு
ஐக்கிய தேசிய கட்சி இம்முறை பொது தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தற்போதுள்ள நிலையிலும் பார்க்க பத்து மடங்கு பின்னடைவை சந்திக்குமென தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி ஹரிஸ்பத்துவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் தேவைக்காக புரட்சி, ஆர்ப்பாட்டம் அல்லது சுவரொட்டியொன்று ஒட்டப்பட்ட சந்தர்ப்பம் ஒன்று இருக்கின்றதா என கேள்வி எழுப்பிய கே.டி. லால்காந்த, ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தின் செயற்பாடுகள் முற்றாக சீர்குழைந்துள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான எதிர்ப்பார்ப்புக்கள் இழந்தவர்களும் ஐக்கிய தேசிய கட்சியோடு நீண்டகாலம் இருந்தவர்களும் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து நாட்டை கட்டியெழுப்ப மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments are closed.