சுன்னாகம் கழிவோயில் விவகாரம்! முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் மன்னிப்புக் கோர வேண்டும்: கணேஸ்வரன் வேலாயுதம் விசேட செவ்வி (Video)

சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் கழிவெண்ணை கலந்த விவகாரத்தில் முன்னாள் முதல்மைச்சர் விக்னேஸ்வரன் பத்துப் பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்று வெளிவந்தது. அந்த அறிக்கையிலும் பொய்கள் தான் வெளிவந்தன. பொய் சொன்னவர்கள் சாதாரணமானவர்களல்லர். கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர்கள். இவர்கள் வந்து மக்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வேண்டும். இவர்களுக்கு வழங்கப்பட்ட பணங்கள் யாவும் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சரும் மன்னிப்புக் கோர வேண்டும் என ஐக்கியமக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்டப் பிரதான வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(02) வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தேர்தலில் வெற்றி பெற்றால் என்னுடைய முதலாவது பாராளுமன்ற உரையில் நிறைய ஊழல்கள் இடம்பெற்ற கம்பெரெலியாத் திட்டம், இரணைமடு குடிநீர்த் திட்டம், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை உள்ளிட்ட உழல்கள் தொடர்பாக சுட்டிக் காட்டி உரையாற்றுவேன்.

இரணைமடு குடிநீர்த் திட்ட விவகாரத்தில் நடந்த ஊழல்கள், மோசடிகள் தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியிலிருந்த போது 300 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் 300 கோடி ரூபா வரையான மக்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவில்லை.

தங்களுக்கு கீழே பதவி வகித்த அதிகாரிகளைக் கொண்டு 17 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது பதவியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநரிடமும் நேரடியாகச் சென்று நான் கலந்துரையாடிய போதும் இதுவரை 300 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை வெளியாகவில்லை.

நிச்சயமாக நான் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் மறைக்கப்பட்டுள்ள இரணைமடு குடிநீர்த் திட்டம் தொடர்பான அறிக்கையை வெளிக் கொண்டு வருவேன். இந்த விவகாரத்தில் பிழை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

2010 ஆம் ஆண்டு நெல்சிப் திட்டத்திலும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. சில கட்டடங்களைக் கட்டாமலேயே பணங்களைப் பெற்றுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவிருந்த சி. வி. விக்னேஸ்வரன் இதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமித்திருந்த போதிலும் அவரது பதவிக் காலத்தில் எதனையும் செய்ய முடியவில்லை. ஆனால், இந்த விசாரணையை ஐந்து அல்லது ஆறு மாத காலத்திற்குள் முடித்திருக்கலாம். இவ்வாறான ஊழல்களுடன் பெரும் பதவியிலுள்ளவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.

இதேவேளை, ஐக்கியமக்கள் சக்தியின் யாழ். தேர்தல் மாவட்டப் பிரதான வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் எமது செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் முழுமையான வடிவத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம்.

{நேர்காணல்:- செ. ரவிசாந்}

Comments are closed.