லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடிப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடிப்பினால் 25 பேரளவு மரமாகியுள்தாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு என சொல்லப்பட்டாலும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை.
வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, தீ இன்னும் கடுமையான புகையுடன் பரவுகிறது.
வெளிநாட்டு ஊடக அறிக்கையின்படி, தீயணைப்பு படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறது
2005 ல் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பின் பின்னணியில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன, அந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன.
2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை.
இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
கொலை வழக்கு
2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கை ஐ.நா தீர்ப்பாயம் விசாரித்தது.
இதன் தீர்ப்பு வர இருக்கும் சூழலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த வழக்கில் இரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
இரண்டாம் வெடிப்பு ஹரீரி வீடு அருகே நிகழ்ந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
Comments are closed.