வீதிகளில் வேட்பாளர்களின் பிட்டுக்கள்

யாழில் தேர்தலில் வாக்குச் சாவடிகளை அன்மித்த வீதிகளில் வேட்பாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் பரவலாக விசிறப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரங்கள் கடந்த  இரண்டாம் திகதியுடன் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில்  நேற்று இரவோடு இரவாக வாக்குச் சாவடிகளுக்கு அருகில் உள்ள வீதிகளில் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள், கட்சிச் சின்னங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள், அட்டைகள் என்பன  விசிறப்பட்டுள்ளன.
திட்டமிட்ட வகையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இவ்வாறு வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விசிறியுள்ளமை தொடர்பில் பலர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்.

Comments are closed.