தேர்தல் சூடுபிடித்துள்ள நேரத்தில் எஸ்.எஃப் லொக்கா சுட்டுக் கொல்லப்பட்டார் – வாகனம் தீப்பிடித்தது

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான, ‘எஸ்.எஃப். லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க அனுராதபுரத்தில் உள்ள தஹாயகம பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை இனந் தெரியாத நபர்கள் தஹாயகம ரயில்வே சந்தியின் அருகே வைத்து சுட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

எஸ் எப். லொக்காவைத் தவிர, மற்றொரு பெண் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார், காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் பயணித்த கார் கூட தீப்பிடித்து கடுமையாக சேதமடைந்தது.

அனுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான கிளப்பின் உரிமையாளர் கராத்தே வசந்தவை கொலை செய்தமை மற்றும் வேறு பல குற்றங்களுக்காக , எஸ்.எஃப் லொக்கா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிந்திய இணைப்பு
இவர், அநுராதபுரம், கடபனஹவிலுள்ள பனோரமா இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே வீரருமான வசந்த சொய்சா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபராவார்.

கராத்தே வீரரான வசந்த சொய்சா கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி அவரது விடுதியில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து அனுராதபுர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.