2020 நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு 60%

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (ஆகஸ்ட் 05) காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 5:00 மணிக்கு முடிந்தது.

மாலை 4 மணியளவில், கிட்டத்தட்ட 60% வாக்குகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நாளை (ஆக. 06) காலை 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார்.

12,985 வாக்களிப்பு நிலையங்களில், இன்று (05) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு, பிற்பகல் 5.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்றையதினம் வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு இடம்பெற்ற காலப்பகுதியில், சட்டத்தை மீறிய 520 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 55% இற்கும் அதிக வாக்குப்பதிவு

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இன்று (05) இடம்பெற்று வரும் நிலையில், பிற்பகல் 2.00 மணி வரை சராசரியாக 55 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் 53%
வன்னி 56%
திருகோணமலை 50%
புத்தளம் 52%
கம்பஹா 53%
நுவரெலியா 65%
களுத்துறை 60%
மட்டக்களப்பு 55%
அம்பாந்தோட்டை 60%
மாத்தளை 58%
பொலன்னறுவை 55%
மொணராகலை 56%
கண்டி 55%
கொழும்பு 51%
காலி 55%
இரத்தினபுரி 55%
திகாமடுல்ல 55%
குருணாகல் 55%
பதுளை 50%
கேகாலை 55%
மாத்தறை 54%
அநுராதபுரம் 50%

இதேவேளை, நண்பகல் 12.00 மணிக்கு 40% வாக்குப்பதிவும், மு.ப. 10.00 மணிக்கு 25% வாக்குப்பதிவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நண்பகல் 12.00 மணி வரை 40 வீத வாக்குப் பதிவு

பொதுத் தேர்தல் இன்று (05) இடம்பெற்று வரும் நிலையில், நண்பகல் 12.00 மணி வரை சுமார் 40 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதனைத் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா 48%
கொழும்பு 34%
கம்பஹா 35%
களுத்துறை 35%
கண்டி 35%
மாத்தளை 46%
காலி 45%
மாத்தறை 44%
அம்பாந்தோட்டை 40%
யாழ்ப்பாணம் 35%
வன்னி 42%
மட்டக்களப்பு 40%
திகாமடுல்ல 40%
திருகோணமலை 40%
பதுளை 45%
கேகாலை 43%
இரத்தினபுரி 41%
அநுராதபுரம் 35%
பொலன்னறுவை 28%
புத்தளம் 35%
மொணராகலை 55%
குருணாகல் 40%

இதேவேளை, இன்று முற்பகல் 10.00 மணி வரை,

திருகோணமலை 30%
திகாமடுல்ல 20%
யாழ்ப்பாணம் 20%
மன்னார் 16.8%
முல்லைத்தீவு 13.5%
கிளிநொச்சி 25.19%
வவுனியா 16%
அநுராதபுரம் 29%
களுத்துறை 22%
பொலன்னறுவை 21%
மாத்தளை 25%
அம்பாறை 19.3%
நுவரெலியா 25%
மொணராகலை 35%
இரத்தினபுரி 24%
பதுளை 25%
அம்பாந்தோட்டை 24%
காலி 20%
கேகாலை 25%
குருணாகல் 20%
கண்டி 25%
புத்தளம் 16%
கொழும்பு 25%
மாத்தறை 22%

Comments are closed.