மகிந்த ராஜினாமாவை அறிவிக்கவுள்ளார்

தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேர்தல் ஆணையத்தில் மற்றொரு ஊடக மாநாட்டை நடத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதுவே தனது தேர்தல் ஆணையத்தில் இறுதி ஊடக சந்திப்பு என்றார்

எல்லோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இதே இடத்தில் மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த மாட்டேன் என்றும் தேர்தலுக்குப் பிறகு அவரது அலுவலகத்தில் நடந்த ஊடக மாநாட்டில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதன்படி, இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவர் இந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று பல வாரங்களாக தெரிவிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.