உலகெங்கிலும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 யும் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரேசில் நாட்டில் மாத்திரம் 97 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள 213 சுயாட்சி நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்தும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 89 லட்சத்து 56 ஆயிரத்து 830 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பெற்று குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் அதிகளவில் மரணத்தை தழுவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலாவதாக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் இது வரை 1,61,592 பேர் பலியாகியுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் மெக்சிகோவும் உள்ளன. அயல் நாடான இந்தியா நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.