கட்சி செயலாளர் தலை மறைவு : தேரர்கள் தத்தளிப்பு
அபே ஜனபலய கட்சிக்கான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரண்டு பௌத்த தேரர்களான ஞானசார தேரருக்கு அல்லது ரத்தன தேரருக்கு கிடைக்க வேண்டும்.
இருப்பினும், கட்சிக்குள் முன்னொருபோதும் இல்லாத நெருக்கடி எழுந்துள்ளது. அதாவது கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரோ திடீரென தலைமறைவாகியுள்ளமையால்தான். அவர் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கட்சி தவித்துப் போயுள்ளது.
அவர் தப்பிச் சென்று எங்கோ தலைமறைவாகி உள்ளதாக கட்சியின் சில உறுப்பினர்கள் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், கட்சியின் பொதுச் செயலாளரான விமலதிஸ்ஸ தேரோவின் கையொப்பமின்றி தேர்தல் ஆணையம் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஞானசாரா தேரரை அல்லது ரத்தன தேரரை தேசியப்பட்டியலில் நியமிக்காது.
Comments are closed.