சுகாதார விதிகளை மீறி நல்லூரில் நடமாடிய பாராளுமன்ற உறுப்பினர்
நல்லூர் ஆலயச் சூழலில் முகக்கவசம் இன்றி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நடமாடியமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நெருக்கடி நிலைமைகள் காரணமாக நல்லூர் ஆலயச் சூழலிற்குள் உள் நுழையும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கைகளைக் கழுவி சமூக இடைவெளியை பின்ற்றி செல்ல வேண்டும் என சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தல் விடப்பட்டது. அனைவரும் அதனை பின்பற்றி வருகின்றனர்
ஆனால் நேற்று தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகைதந்த சிறிதரன் முகக் கவசம் இன்றி ஆலயச் சூழலில் நடமாடி அந்த புகைப்படங்களை தனது உத்தியோக பூர்வ முகநூலில் பதிவிட்டு இருக்கின்றார்.
மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய சூழலில் நடமாடி வருகின்ற நிலையில் மக்கள் பிரதிநிதி இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.