தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அதிவிசேட வர்த்தமானியூடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 196 வேட்பாளர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் பின்னர் வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ள அதேவேளை தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்றிரவு கலந்துரையாடினர்.

Comments are closed.