தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு

2020 பொதுத்தேர்தலில் யாழ் மாவட்ட பெறுபேறுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதில் சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் பெறுபேற்றினை அறிவிப்பது குறித்து நீண்ட நேர காலப்பகுதி எடுத்தமை ஏன் எனவும் அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் சசிகலா ரவிராஜிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் அவரது இல்லத்தில் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச அதிகாரிகளை பரிசோதிப்பதற்கு தமது தரப்பு ஒரு போதும் தயாரில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.