சிறுபான்மை வேட்பாளர்கள் மூவர் வெற்றி

மனோ கணேசன் உட்பட இம்முறை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிறுபான்மை வேட்பாளர்கள் மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட மனோகணேசன், எஸ். எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் மனோ கணேசன் 62,091 வாக்குகளையும் எஸ்.எம். மரிக்கார் 96, 916 வாக்குகளையும் முஜிபுர் ரஹ்மான் 87,589 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.