ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று முடிவு?
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தேசிய பட்டியல் தொடர்பில் இழுபறியை சந்தித்துள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளன.
இந்த சந்திப்பில் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு மீண்டும் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனக்கு தேசிய பட்டியல் ஆசனம் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 07 தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட இருக்கின்ற நிலையில் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் உறுப்பினர்களில் ஒருவருக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட வேண்டுமென முன்னர் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை.
அடுத்து வரும் நாட்களில் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக எமது மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.