குருநாகல் மேயருக்கு மீண்டும் பிடியாணை!

புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருநாகல் மேயர் உள்ளிட்டோருக்கு எதிராக, குருநாகல் நீதிவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்ட பிடியாணையைக் குருநாகல் பொலிஸார் நடைமுறைப்படுத்தாமை காரணமாக, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் குருநாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் ஊடாக குறித்த பிடியாணையை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
அத்தோடு, சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவையும் நீதிவான் பிறப்பித்துள்ளார்.
Comments are closed.