அமைச்சு கட்டமைப்பு அதிவிசேட வர்த்தமானியூடாக வெளியீடு – ஜனாதிபதி

புதிய அரசாங்கத்தின் அமைச்சு கட்டமைப்பை அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சு கட்டமைப்பில் 28 அமைச்சுக்களும் 40 இராஜாங்க அமைச்சுக்களும் மட்டுமே அடங்குகின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பொறுப்பில் உள்ள அமைச்சுக்களும் இதில் அடங்குகின்றன.

தேசிய முக்கியத்துவம், கொள்கை திட்டமிடல் பொறுப்பு மற்றும் பணிகளை கவனத்திற்கொண்டு அமைச்சு கட்டமைப்புக்கள் தயாரிக்கப்படும்.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு துறை தொடர்பாக விசேட கவசம் செலுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.